என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரபேல் விமானம்"
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்தும், ரபேல் விவகாரத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான சில ஆவணங்களின் அடிப்படையிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர்.
அரசின் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதால் இதுதொடர்பாக இவ்வழக்கின் கட்சிக்காரர்களுக்கு கடிதம் அனுப்ப மத்திய அரசு வக்கீல் அனுமதி கோரினார்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. எனவே, இவ்வழக்கு நாளைய தினத்துக்கு பதிலாக வேறொரு தேதியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #CentralGovernment #Governmentseekstime #Rafalecase #Rafalereviewpetition
காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை வான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் டெல்லியில் இந்திய விமானப்படை சார்பில் மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி ‘2040-ல் விண்வெளி சக்தி; தொழில்நுட்பத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் உரிய நேரத்தில் ரபேல் போர் விமானங்களை நமது படையில் இணைத்திருந்தால் இந்த முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும். ரபேல் மற்றும் தரையில் இருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை எஸ்-400 ஆகியவற்றை நமது படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மேலும் நமக்கு சாதகமாக மாறும். இது 2002-ம் ஆண்டு நடைபெற்ற பராகராம் சம்பவத்தின்போது நடைபெற்றதைப்போல இருக்கும்.
நமது ராணுவத்தின் அனைத்து படைகளையும் விட நம்மை தான் தொழில்நுட்பம் மிகவும் பாதிக்கிறது. தரையில் உள்ள படைகள் குறிப்பாக வீரர்களுடன் போரிடும்போது கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் கருவிகளை இயக்குகிறார்கள். ஆனால் போர் விமானத்தில் இது மிகச்சிறிய கருவிகளாக இருக்கும்.
மோசமான வெப்பநிலை மற்றும் காற்றழுத்த நிலைமை ஆகியவற்றையும் பொருத்ததாக இது இருக்கும். தொழில்நுட்ப மாற்றத்திலும் விமானப்படையின் சக்தி மிகவும் பிரச்சினைக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதுபோல, கடந்த ஆண்டு ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஏவுகணை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் போர் விமானம், ஏவுகணை, ஏன் ஆளில்லா குட்டி விமானங்களையும் (டிரோன்) அழிக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RafaleFighter #Balakot #Dhanoa
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெக்ரிஷி, கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக இருந்தார்.
அந்த காலகட்டத்தில்தான், அதாவது 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, ரபேல் ஒப்பந்ததை இறுதி செய்து அறிவித்தார்.
நிதித்துறை செயலாளர் என்ற முறையில், ரபேல் தொடர்பான பேச்சுவார்த்தையில் ராஜீவ் மெக்ரிசி பங்கேற்றுள்ளார். எனவே, அவர் ரபேல் பேரம் குறித்து தணிக்கை செய்வதற்கு உகந்தவர் அல்ல. ஆகவே, ராஜீவ் மெக்ரிஷி, ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்தும், நாடாளுமன்றத்தில் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார். #RafaleDeal #KapilSibal
புதுடெல்லி:
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2001-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது.
2012-ம் ஆண்டு இதற்காக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. பிறகு அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு திடீரென ரத்து செய்து விட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டதும், பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றி மீண்டும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி புதிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.
இந்த புதிய ஒப்பந்தப்படி, “ரபேல் போர் விமானத்துக்கான 50 சதவீத உதிரிப்பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து பிரான்சு கொள்முதல் செய்ய வேண்டும்” என்று இந்தியா நிபந்தனை விதித்திருந்தது. இதை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டதால் இந்திய பாதுகாப்புத் துறைக்கு நவீன ரபேல் போர் விமானங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அடிக்கடி “ரபேல் விமான கொள்முதலில் ஊழல்” என்று பேசி வருகிறார்.
ராகுலின் பொதுக்கூட்ட மேடை பேச்சு மற்றும் பேட்டிகளின் போது ரபேல் விவகாரம் தவறாமல் இடம் பெறுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று ரபேல் ஒப்பந்தம் பற்றி ராகுலிடம் 15 கேள்விகளை கேட்டுள்ளார்.
இந்த கேள்விகளை தனது ‘பேஸ்புக்‘ இணையத்தள பக்கத்தில் அருண்ஜெட்லி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி ராகுல் தொடர்ந்து தவறான தகவல்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
மேலும், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டதை விட 20 சதவீதம் குறைவான விலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பா.ஜ.க. அரசு செய்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் வைக்கப்பட்டு 14 மாதங்கள் கழித்துத்தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. எனவே எந்த உண்மையையும் அரை குறையாக ராகுல் பேசக்கூடாது” என்றும் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இந்த விளக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனடியாக டுவிட்டரில் பதில் அளித்தார். அதில் ராகுல் கூறி இருப்பதாவது:-
ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய கொள்ளை நடந்து இருப்பதாக நான் நாடு முழுவதும் கூறி வருகிறேன். இதுவரை மத்திய அரசு இதில் எதுவும் சொல்லாமல் இருந்தது. முதன் முதலாக இந்த கொள்ளை பற்றிய தகவல்களை நாட்டு மக்களின் கவனத்துக்கு அருண் ஜெட்லி கொண்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரபேல் ஒப்பந்தம் பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழுவில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு மத்திய அரசு தயாரா? என்பதை அறிய விரும்புகிறேன்.
இந்த விவகாரத்தில் உங்கள் தலைவர் (மோடி) தனது நண்பரை (அணில்அம்பானி) காப்பாற்றி வருகிறார். இதுதான் இப்போது பிரச்சினையாக உள்ளது. இதுபற்றி அருண்ஜெட்லி 24 மணி நேரத்தில் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ராகுல் சவால் விட்டுள்ளார். இதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
முதலில் அருண்ஜெட்லி கேட்ட 15 கேள்விகளுக்கு ராகுல் பதில் சொல்லட்டும். அதில் இந்த பிரச்சினைக்குரிய எல்லா விடைகளும் இருப்பதாக ராகுலுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு சுட சுட பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவரையும் முட்டாள் என்று நினைத்துக் கொண்டு ராகுல் பேசி வருகிறார். அவரை விட நாட்டு மக்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக உள்ளது.
ரபேல் போர் விமான விலை பற்றி ராகுல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி கூறி வருகிறார். டெல்லி, பெங்களூர், ராய்ப்பூர், ஐதராபாத், ஜெய்ப்பூர் நகரங்களில் ரபேல் போர் விமான விலை பற்றி மாறுபட்ட தகவல்களை ராகுல் கூறினார்.
பாராளுமன்றத்தில் இதுபற்றி பேசும்போது, வேறு விலையைக் குறிப்பிட்டு பேசினார். இதுபற்றி பாராளுமன்ற கூட்டுக்குழுவில் விசாரிக்க 24 மணி நேரம் கூட ராகுல் காத்திருக்க வேண்டியதில்லை.
காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு கூட்டுக்குழு உள்ளது. அங்கு விசாரித்தாலே போதுமே.
இவ்வாறு ராகுலை கிண்டல் செய்து அமித்ஷா பதில் அளித்துள்ளார்.
ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை மறுத்து வரும் பா.ஜனதா, இந்த ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை இந்தி நடிகை பல்லவி ஜோஷியை வைத்து விளக்கம் அளித்துள்ளது.
பல்லவி ஜோஷி நடித்து, 2.19 நிமிட நேரம் ஓடும் வீடியோ படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு நேற்று வெளியிட்டது.
அதில், “மலிவான விலையில் போர் விமானங்கள் வாங்குவதே ரபேல் ஒப்பந்தத்தின் நோக்கம். இதுபோல், ஏவுகணைகளையும் வாங்குவோம். அவற்றின் உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி மிச்சம் ஆகியுள்ளது என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம்” என்று பல்லவி ஜோஷி கூறுகிறார்.
தனது பேச்சுக்கிடையே, ‘உருளைக்கிழங்கு தொழிற்சாலை’ என்று யாரையோ பெயர் குறிப்பிடாமல் பல்லவி ஜோஷி கிண்டல் செய்வதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. #BJP #RafaleDeal #PallaviJoshi #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்